மேலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருப்பதினால் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் உடனடியாக மத்திய மாநில அரசுகள் நடக்க நடவடிக்கை எடுத்து மூடப்பட்டு இருக்கும் தொழிற்சாலைகளும் திறக்க வேண்டும் என்றும் இதனால் தாமிரம் பற்றாக்குறையால் கிரைண்டர், மோட்டார், கம்பரசர், பம்ப் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தமிழ்நாடு தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் தாமிரத்தை நம்பி கோவை மாவட்ட உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் உதிரி பாகங்கள் காப்பர் மற்றும் ராடுகள் சமீப காலமாக குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து அதிக விலைக்கு வாங்கப்பட்டு தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதால் உற்பத்தி குறைந்து தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.மேலும் கோவையில் உள்ள சோமசுந்தரம் மில்,சாரதா மில், தேசிய அளவிலான மில்களும் தனியார் மில்களும் மூடப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருவதனால் உடனடியாக மத்திய, மாநில அரசு ஆலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோவை:மத்திய, மாநில அரசுகள் பஞ்சாலைகள், ஸ்டெர்லைட், ஹெச்பி மூடப்பட்ட தொழிற் சாலைகளை திறக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!!
April 24, 2025
0
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் பஞ்சாலை தொழிலாளர்களை பாதுகாக்க கோரியும், ஸ்டெர்லைட், பஞ்சாலைகள், ஹெச்பி உள்ளிட்ட தொழிற்சாலைகள் திறக்க கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஆலைகளை திறக்க கோரியும் பஞ்சாலைத் தொழிலாளர்களை பாதுகாப்பு கோரியும் மத்திய, மாநில அரசு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.