மேலும் விவசாய சட்டத்தை பாராளுமன்றத்தில் வாபஸ் பெற்றது போல வக்ஃப் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் இஸ்லாமியர்கள் சொத்துகளை தனியார் நிறுவனத்துக்கு கொடுப்பதாக தெரிவித்தனர்.வக்ஃப் சொத்து என்பது முஸ்லிம்களின் கல்விச்செலவு, பாதுகாப்பிற்கும்,வழிபாடு செலவிற்கும் ஆனது.அதனை பாதுகாக்க இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் இல்லாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்படும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தெரிவித்தனர்.
கோவை:விவசாய சட்டத்தை வாபஸ் வாங்கியது போல வக்ஃப் சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மத்திய அரசுக்கு கோரிக்கை!!!
April 26, 2025
0
கோவை மரக்கடை பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தெற்கு தொகுதி சார்பாக முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டு வந்த வக்ஃப் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.கடந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் மத்திய அரசால் வக்ஃப் சட்டம் நிறைவேற்றப்பட்டது.இதில் 115 திருத்தங்களை திருத்தியுள்ளனர்.மேலும் இந்த சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்என்றுஎஸ்.டி.பி.ஐ கட்சியினர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.