முன்னதாக விழாவில் பேசிய மருத்துவர் தங்கவேலு,கல்லூரி படிப்பை முடித்து செல்லும் மாணவர்கள் தாங்கள் துறை சார்ந்த திறன்களை வளர்த்தி கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.தொடர்ந்து பேசிய கர்நாடகா முதன்மை செயலாளர் செல்வகுமார் கடின உழைப்பு,விடா முயற்சி மட்டுமே ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என தெரிவித்தார்.விழாவில் பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரி மாணவர்கள் 218 மாணவர்கள் மற்றும் வணிக மேலாண்மை கல்லூரி மாணவர்கள் 74 மாணவர்களும் பட்டம் பெற்றனர்.தொடர்ந்து அண்ணா பல்கலைகழக தரவரிசையில் இடம் பிடித்த மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களை சிறப்பு விருந்தினர் முனைவர் விஸ்வநாதன் வழங்கினார்.
முன்னதாக விழாவில் சிறப்புரையாற்றிய அவர்,ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் உயர் கல்வி படிப்பது முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட அவர்,கல்வி பயில்வதில் அக்கறை செலுத்தினால் அங்கே முன்னேற்றம் தனி நபர் வருமானம் உயர்வது சமுதாய மாற்றம் நிகழ்வது என நாட்டின் முன்னேற்றம் உறுதியாகும் என தெரிவித்தார்.விழாவில், பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் செயல் இயக்குனர் கேப்டன் அமுத குமார், பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் முனைவர் நந்தகுமார்,பி.பி.ஜி.வணகப்பள்ளி இயக்குனர் முனைவர் வித்யா,உட்பட துறை சார்ந்த தலைவர்கள்,பேராசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.