தென்காசி:எம்.பி ராணி ஸ்ரீகுமார் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி!!!
April 25, 2025
0
சென்னையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்தை தென்காசி எம் பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார் நேரில் சந்தித்து சங்கரன்கோவில்அரசுமருத்துவமனையில் விபத்தில் காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டால் அறுவை சிகிச்சை அளிப்பதற்கு சி.ஆர்ம் கருவி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருந்தார். இந்நிலையில் 33 லட்சம் மதிப்பீட்டில் சி.ஆர்ம் கருவி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் விபத்து காலங்களில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை எடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தென்காசி எம்பி கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.