வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை கூட்டுரோடு அருகில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்!!!
April 25, 2025
0
வள்ளிமலை கூட்டுரோடு அருகில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.வள்ளிமலை கூட்டுரோடு அருகில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்நிலையில் ராஜ அலங்காரத்தில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிரம்மபுரம் ஸ்ரீஜெயக்குமார் அர்ச்சகர் வெகுவிமரிசையாக செய்திருந்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ வரசித்தி விநாயகரின் அருளுக்கு பாத்திரமாயினர். இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது.