தென்காசி மாவட்டம்:அரசுப் பள்ளிகளுக்கு அறிவியல் ஆய்வக உபகரணங்களை வழங்குதல்!!!
4/19/2025
0
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேர்ந்தமரம் அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளாளன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வெண்றிலிங்கபுரம்அரசுஉயர்நிலைப் பள்ளிக்கு எச்டிஎப்சி பேங்க் பரிவர்த்தனா சிஎஸ்ஆர் நிதி உதவியுடன் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றம் திட்டத்தின் சார்பாக அறிவியல் மற்றும் கணிதம் ஆய்வக உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார். மேலும் திட்ட பெயர் பலகை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். முதன்மை செயலாக்க அலுவலர் கொண்டா ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.துணைத் தலைவர் கண்ணன் திட்ட செயல்பாடுகளை பற்றி எடுத்துரைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை முதன்மை மேலாளர் ஜான் சுகுமார் உள்ளிட்ட களப்பணியாளர்கள் செய்திருந்தனர்.
