தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்!!!
4/15/2025
0
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு நகர தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் சுப்பிரமணியன், புலிக்குட்டி, ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவினை முன்னிட்டு தேசிய செயற்குழு உறுப்பினர் மகாராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் வேல்முருகன், பிரபாகரன், பாலகிருஷ்ணன், ஊடகப்பிரிவு மாவட்டச் செயலாளர் குரு கிருஷ்ண பிரசாந்த், தமிழ் வளர்ச்சி பிரிவு நகரத் தலைவர் கணேசன், முன்னாள் நகரத் தலைவர் கணேசன், கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் அருந்தமிழ்செல்வன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் ரமேஷ், நகர செயலாளர்கள் செல்வ லட்சுமி, பழனிச்சாமி, கலாச்சார பிரிவு செல்வ காமாட்சி கண்ணன், பட்டியல் அணி மாவட்ட செயலாளர் கருப்பசாமி, பிரச்சார பிரிவு மாவட்ட துணை தலைவர் ரவி பாண்டியன், மத்திய அரசு வழக்கறிஞர் வீரபத்திரன், நெசவாளர் பிரிவு தலைவர் சங்கரலிங்கம், நகர கல்வியாளர் பிரிவு நகரத் தலைவர் மாணிக்கம், நகர இளைஞரணி குருசாமி, விக்னேஷ், ஆன்மிக பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில் குமார், ஹிந்து ஆலய பாதுகாப்பு பிரிவு கனி, நகர நிர்வாகிகள் மனோஜ் குமார், பால்ராஜ், கணபதி, ராமையா, பழனிக்குமார், சேகர், கணேசன், பிரபாகரன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
