இந்த யாத்திரையின் கீழ், 40க்கும் மேற்பட்ட பால் பண்ணை தொழில்முனைவோர் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் 6,000 கி.மீ.க்கும் மேற்பட்ட தூரம் பயணம் செய்து பால் பண்ணையில் முன்னணி கண்டுபிடிப்புகளை ஆராய்கின்றனர்.இந்த பயணத்தை குமரகுரு கல்வி நிறுவனங்களின் ப்ரெசிடெண்ட் சங்கர் வானவராயர், ரேஸ் கோர்ஸில் உள்ள குமரகுரு சிட்டி சென்டரில் இருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.அதிக உற்பத்தி செலவு, பாலுக்கு குறைந்த விலை, கால்நடை மருத்துவ சேவைகள் போன்றவை இதன் முக்கிய காரணிகளாகும்.இந்த யாத்திரையில், 15 முன்னணி பால் பண்ணைகள், கண்டுபிடிப்பு மையங்கள் மற்றும்ஆராய்ச்சிநிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கோவை:குமரகுரு நிறுவனங்கள் சார்பில் காலநிலைசார்ந்த பால் துறை தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கியது!!!
April 16, 2025
0
குமரகுரு நிறுவனங்களின் பால் பண்ணை யாத்திரை - கற்றல் மற்றும் உத்வேகத்திற்கான முதல்-வகையான பயணம் குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் கோயம்புத்தூரில் இருந்து தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் பின்பற்றப்படும் பால் பண்ணை தொடர்பான சிறப்பான நடைமுறைகள் பற்றி இத்துறை சார்ந்த தொழில்முனைவோர் அறிந்துகொள்ள 'பால் பண்ணை யாத்திரை' என்ற கற்றல் பயணம் துவங்கியது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி அமைப்பு உடன் குமரகுரு கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த யாத்திரை நடக்கிறது.