இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபி கட்சியின் நிர்வாகிகள் தொழிற்சங்க மற்றும் வர்த்தக அணி நிர்வாகிகள் விமன் இந்தியா மூவ்மெண்ட் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கையில் கருப்பு கொடிகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பினை மத்திய அரசுக்கு எதிராக பதிவு செய்தனர்
கோவையில் வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி எஸ் டி பி ஐ கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் இரண்டு கைகளை கட்டிக்கொண்டு மனித சங்கிலியாக நின்று மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!!!
May 04, 2025
0
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்த சட்டமானது முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் இது முழுக்க முழுக்க முஸ்லிம்களுடைய சொத்துக்களை பறிக்கக் கூடிய சட்டம் எனவே இந்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசு வாபஸ் வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எஸ்டிபிஐ கட்சியின் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக கோவை மத்திய மாவட்டம் சிங்கை தொகுதியின் சார்பாக மனித சங்கிலி போராட்டம் 84 ஆவது வார்டு வள்ளல் நகரில், சிங்காநல்லூர் தொகுதியின் தலைவர் ஆஷிக் இக்பால் தலைமையில் நடைபெற்றது. சிங்காநல்லூர் தொகுதி செயலாளர் இர்பான், தொகுதி பொருளாளர் காஜா உசேன், துணைச் செயலாளர்கள் ஜமாலுதீன் சையது அபுதாஹிர் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன், எஸ் டி டி யூ மாநில பொதுச்செயலாளர் ஹவுஸ் நிஸ்தார், 84 வது வார்டு செயலாளர் ஏ கே முகம்மது, வார்டு தலைவர் அப்துல் அக்கீம், செயலாள அபுதாகிர், தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி தலைவர் காசிம், கிணத்துக்கடவு தொகுதி தலைவர் தாஜுதீன் மற்றும் விம் தொகுதி நிர்வாகிகள், ஜமாத்தார்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.