இந்நிகழ்விற்கு கல்லூரிச் செயலர் முனைவர் அருட்சகோதரி ஆ. மேரி ஜோஸ்பின் ராணி தலைமை வகித்தார் . கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி அ. ஆரோக்கிய ஜெயசீலி வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் முனைவர் சகோ. அமலா வளர்மதி மற்றும் IQAC ஒருங்கிணைப்பாளர் முனைவர் சகோ. சகாய மேரி முன்னிலை வகித்தனர். வணிகவியல் துறை மாணவி சிறிஜனனி வரவேற்புரை வழங்கினார். கணிதவியல் துறை மாணவி செல்வி. காயத்ரி நன்றியுரை வழங்கினார். 30 மாணவிகள் இப்பயிற்சியில் பங்குப் பெற்று பயனடைந்தார்கள். இப்பயிற்சியில் யோகா, நடனம், சமையற்கலை, அழகுக்கலை போன்ற பயிற்சிகளைச் சிறந்த நிபுணர்களைக் கொண்டு அளிக்கப் பெற்றது. பெண்களின் தனித்திறன்களை வளர்க்க இம்முகாம் வாய்ப்பாக அமைந்தது.
வேலூர் ஆக்சிலியம் கல்லூரியில் தன்னாட்சி கோடைகால திறன்வளர் பயிற்சி முகாமின் நிறைவு விழா!!!
5/02/2025
0
வேலூர் ஆக்சிலியம் கல்லூரியின் உள்தர மதிப்பீட்டுக் குழுவும் (IQAC) ஆக்சிலியம் மாணவர் நலக் குழுவும் (Students welfare) இணைந்து 21 -04 - 2025. முதல் 30.04.2025 வரை பத்து நாட்கள் பெண்களுக்கான “கோடைகால திறன்வளர் பயிற்சி முகாம்” நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக தொலைகாட்சி நட்சத்திரம் எஸ்.அபிநயகுமாரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பயிற்சியில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
