திண்டுக்கல் :புதுச்சத்திரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்!!!
May 01, 2025
0
ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சியில் கிராம சபைகூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ரெட்டியார் சத்திரம் யூனியன் அலுவலக கணக்காளர் மணிமேகலை தலைமை வைத்தார். மேலும் கிராம மக்களின் கோரிக்கையான மாட்டு கொட்டகை. புதிய தெருவிளக்கு மற்றும் கழிவுநீர் வாய்க்கால் பணிகளை செய்திட கோரிக்கை வைத்தனர். மேலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி மொழி எடுத்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பாதுகாப்பு அலுவலர் சக்திவேல். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மேற்பார்வையாளர் அமுதா. கிராம நிர்வாக அலுவலர் பால்பாண்டி. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி. துணைத்தலைவர் கிருஷ்ணவேணி காளியப்பன். ஒன்றிய அவைத் தலைவர் வெள்ளையன். கிளைச் செயலாளர் முத்துராஜ். சமூக ஊக்கிவிப்பாளர்கள் கவிதா. ராஜாமணி கணினி ஆப்ரேட்டர் நாகலட்சுமி கிராம சபை கூட்டம் நிறைவில் ஊராட்சி செயலாளர் செந்தில் முருகன் நன்றி கூறினார்.