வேலூர்:கோடை வெயிலை தணிக்க பொதுமக்களுக்கு நீர் மோர் விநியோகம் செய்த தொழிலதிபர்!!!
April 30, 2025
0
வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை கூட்டுரோட்டில் பேருந்து நிறுத்தம் அருகில் திறந்த லோடு ஆட்டோவில் சுமார் 1200 லிட்டர் நீர் மோர் மற்றும் 500 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவற்றை கொண்டு வந்து பொதுமக்களுக்கு கோடை வெயிலை தணிக்கும் வகையில் விநியோகம் செய்தனர் தொழிலதிபர் தம்பதியரான காட்பாடி செங்குட்டை மாடு விடும் தெருவைச் சேர்ந்த அச்சுதன்-அமுதா தம்பதியினர். இவர்களுக்கு உதவியாக அவர்களின் மகள் செல்வி தியா உதவினார். இந்த நீர் மோர் மற்றும் குளிர்ந்த நீரை வாங்கி அருந்திச் சென்ற பேருந்தில் பயணித்த பயணிகள் மற்றும் நடந்து சென்ற பாதசாரிகள், பொதுமக்கள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் மனதார தங்கள் தாகத்தை தீர்த்த தம்பதியரை வாழ்த்தி விட்டு அந்த இடத்தை விட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.