புதுடெல்லி:தமிழ்நாட்டின் வளர்ச்சியை நோக்கி மத்திய அரசின் பங்களிப்புகள்!!!

sen reporter
0

சமீபத்தில், புதிதாக அமைக்கப்பட்ட, இந்தியாவின் முதல் செங்குத்து 'பாம்பன் பாலத்தை' பாரதப் பிரதமர் திறந்து வைத்தார், மேலும், ரூ.8000 கோடி மதிப்பிலான பல்வேறு இரயில்வே மற்றும் சாலை திட்டங்களை தமிழ் நாட்டில் நடைமுறைக்கு கொண்டுவந்தார். அத்துடன் இது தமிழ்நாட்டிற்கு தொடர்புடைய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.மத்திய அரசின் ஆதரவுடன், 2014 முதல் தற்போது வரை, தமிழ்நாட்டில் 4000 கிமீ சாலைகள் போடப்பட்டுள்ளன. இவை சென்னையின் கடல் துறைமுகத்தை இணைக்கும் உயர்நிலை புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உள்ளடக்கியது ஆகும். மேலும் பாரதப்  பிரதமர் நான்கு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு முக்கியமாக NH-40 (29 கிமீ), NH-332 (29 கிமீ), NH-32 மற்றும் NH-36 ஆகியவை நான்கு வழித்தடமாக விரிவுபடுத்த அடிக்கல் நாட்டினார்.2014-க்கு முன், தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கு வருடத்திற்கு ரூ.900 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2024-25 நிதியாண்டில் இது ரூ.6000 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு இரயில்வே துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு கடந்த பத்து வருடத்தில். ஏழு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ‘அம்ருத் பாரத் நிலைய திட்டத்தின்’ கீழ் தமிழகத்தில் உள்ள 77 ரயில்வே நிலையங்களை மேம்படுத்தி வருகிறது.  இந்த  திட்டத்தின் மூலம், ராமேஸ்வரத்தை  ‘வந்தே பாரத்’ சேவையில் சேர்த்துக் கொண்டு தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும், ‘பிரதம மந்திரி விலையில்லா வீடு’ (PMAY) திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் சுமார் 12 லட்சம் நிரந்தர காண்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு, மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் 1,11,00,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர்க் குழாய்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர், ‘பிஎம் ஜன் ஆரோக்ய யோஜனா – ஆயுஷ்மான் பாரத்’ (PMJAY-AB) திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறையில் சிகிச்சை பெற்றுள்ளனர்., இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ரூ.80000 கோடி வரை சிகிச்சைச் செலவுகள் மத்திய அரசால் தாங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தினை 1400க்கும் மேற்பட்ட ‘ஜன் அவுஷதி கெந்திரா’ (JAKs) மூலமாக, 80% தள்ளுபடி விலையில் அவசியமான மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றனர், இதன் மூலம் இந்த மாநில மக்களுக்கு ரூ.7000 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.முக்கியமாக, ‘பிஎம் கிசான் சன்மான் நிதி’ (PM-KISAN) திட்டத்தின் கீழ் தமிழ்நாடு விவசாயிகள் சுமார் ரூ.12,000 கோடி பெறந்துள்ளனர். இவற்றுடன், ‘பிஎம் பசல் பீமா யோஜனா’ (PMFBY) திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு காப்பீடாக சுமார் ரூ.14,800 கோடியை கோரியுள்ளனர்.தமிழ்நாடு கடந்த ஐந்து ஆண்டுகளில், ‘பிஎம் மத்தியா சம்பதா யோஜனா’ (PMMSY) திட்டத்தின் கீழ் முறையான நிதி ஆதரவு பெற்றுள்ளது. இதன் மூலம் குளிர்பதன களஞ்சியக் கொட்டகைகள் மற்றும் மீன் வளர்ப்பு மையங்கள் போன்ற நவீன வசதிகள் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மேலாக, கடந்த பத்தாண்டுகளில் 3700க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கையிலிருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய உற்பத்தி தொடர்புடைய ஊக்கத்திட்டம் (PLI) தமிழ்நாட்டில் உள்ள மின்னணு தொழில்துறைக்கு மிகுந்த உதவியாக இருந்து, இந்தியாவை உலகின் 10வது பெரிய மின்னணு உற்பத்தியாளர் நாடாக மாற்றியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது.மேற்கண்ட முயற்சிகள் மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட ‘விக்சித் பாரத் @ 2047’ என்ற கனவை நிறைவேற்றும் பாதையில் தமிழ்நாட்டை நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதார (ரூ.320 பில்லியன்) மாநிலமாக உருவாக்க உதவியுள்ளன.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top