நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற வரலாற்று நில ஆவணங்கள் கண்காட்சியில்,நிலங்களை வரன் முறை செய்தததில் தமிழர்களின் பங்கு குறித்த ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டன.இது குறித்து நில மேலாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் முத்துராஜா கூறுகையில்,இந்த கண்காட்சி, வரலாற்று ஆவணங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில்ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும், நில மேலாண்மை, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்வாயிலாக,கிராமபுறவிவசாயிகளுக்கு நிலப்பயன்பாடு, விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பிற தொடர்புடைய நில மேலாண்மை துறைகள் தொடர்பான பணிகளை முறையாக நடைமுறைப்படுத்துவதுகுறித்தபயிற்சிகளை இந்த ஆராய்ச்சி மையம் மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் பயிற்சி மைய ஆலோசனை குழு இயக்குனர்கள் நில அளவைத் துறை கூடுதல் இயக்குனர்கள் சி.பி ராதாகிருஷ்ணன் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் முதல்வர் கண்ணுசாமி நில அளவைத் துறை உதவி இயக்குனர்கள் மணி சேகரன், தவமணி, கணேசன், மற்றும் எழுத்தாளர் கனலி என்கிற சுப்பு, காமிலா பானு, காமாட்சி, மஞ்சுளா, பங்கஜம், ரங்கநாயகம், மற்றும் கார்த்திகேயன், மோகன்ராஜ், குமாரவேலு செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார் வெற்றிவேல் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்