கோவை:பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதை ஒட்டி குற்றவாளிகளை நேரில் ஆஜர் படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது!!!.

sen reporter
0


கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பல இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்ற செயல் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் புகார் அளித்ததின் பேரில் பொள்ளாச்சியை டவுன் காவல் துறையினர் முதலில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ டிக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகுசி.பி.ஐக்குமாற்றம்செய்யப்பட்டது. இவ்வழக்கில் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரீசன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். மேலும் ஹரன்பால், பாபு என்கின்ற பைக் பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய நான்கு பேர் கடந்த 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், கூட்டுச்சதி தடயங்கள் அழிப்பு உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். வர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் 50 க்கும் மேற்பட்ட அரசு தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு உள்ளனர்.சுமார் 200 ஆவணங்கள் 400 மின்னணு தரவுகள் உள்பட பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் 8 பேர் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்து உள்ளனர். இந்த வழக்கில் ஒவ்வொரு வாய்தாவின் போதும் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு வந்தனர். தற்பொழுது வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்கள் நிறைவு பெற்று உள்ளன. இதை அடுத்து கைதான 9 பேரிடம் சட்ட விதிகள் 313 கீழ் கேள்விகள் கேட்பதற்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி திருநாவுக்கரசு உட்பட ஒன்பது பேர் கடந்த 5 ம் தேதி சேலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு கோவை நீதிமன்றத்தில் நீதிபதி ஆர் நந்தினி தேவி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்பொழுது ஒவ்வொருவரிடமும் சுமார் 50 கேள்விகள் கேட்கப்பட்டது.

இதற்கு அவர்கள் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தனர். இந்த நடைமுறை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது இதன் பிறகு இந்த வழக்கு விசாரணை சூடு பிடித்தது அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து இதர நாட்கள் அனைத்திலும் குறுக்கு விசாரணை, இருதரப்பு வழக்கறிஞர்கள் வாதம் தொடர்ச்சியாக நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கின் விசாரணை கடந்த மாதம் 28 ஆம் தேதி மீண்டும் நடந்தது அப்பொழுது வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்ப்பு சாட்சி விசாரணை குறுக்கு விசாரணை என அனைத்தையும் நிறைவு பெற்று விட்டதாகவும் நாளை மே 13 ஆம் தேதி வழக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் வழக்கு தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தப்பட்ட உள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top