செங்கல்பட்டு:கிராம நிர்வாக அலுவலகம் இல்லாததால் பொது மக்கள் அவதி!!!
May 05, 2025
0
புனித தோமையர் மலை செங்கல்பட்டு மாவட்டம் மதுரபாக்கம் முதல் நிலை ஊராட்சி வளாகத்தில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகம் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல் படாமல் அவலநிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது இதற்கு காரணமாக இங்கு கிராம நிர்வாக அலுவலர் சரி வர நியமிக்கவில்லை என்றும் இதனால் பொதுமக்கள் பள்ளி சான்றிதழ் மற்றும் பல சான்றிதழ்கள் பெற முடியாமல் அலைகழிகபட்டு மிகவும் சிரமப்படுகின்றனர் இதனை இப்பகுதியின் தாசில்தார், R.I. ,வருவாய்த்துறை கோட்டச்சியர் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை செய்தும் பயனில்லை . தொலைபேசியை தொடர்புகொண்ட போதும் இணைப்பை துண்டித்து புரகணிகின்றனர் .இதனையடுத்து மதுரபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிலாஞ்சேரி வேல்முருகன் மற்றும் அமுதா வேல்முருகன் அவர்கள் அனைத்து அதிகாரிகளிடத்திலும் இது பற்றி மனு கொடுத்தும் எந்த ஒரு முடிவும் ஏற்படவில்லை மேலும் ஊராட்சி மன்ற தலைவர் மதுரப்பாக்கம் வேல்முருகன் தி.மு.கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது இவருக்கே இந்தக் குறிப்பிட்ட அதிகாரிகள் மதிப்பு கொடுப்பதில்லை ஆகையால் கிராம சபை கூட்டத்தில் ஒட்டுமொத்த கருத்தாக கருதி வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்வதாக பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் எச்சரித்தனர் மேலும் இதற்கு செவி சாய்க்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அனைத்து பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.இப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலகம் செயல்படாததால் அலுவலகத்தில் புகைப்பிடிப்பது மது அருந்துவது போன்ற முறைகேடுகளை சிலர் செய்து கொண்டிருக்கின்றனர் இதனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.