சென்னை:மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்யவில்லையெனில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் தொடரும்!!!
May 05, 2025
0
சென்னை பனையூரில் மத்திய அரசு கொண்டுவந்த வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் கண்டன பொதுக் கூட்டத்தை நடத்தினர் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு அஜ் கமிட்டி தலைவரும் பாபநாசம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அப்துல் சமது மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு மத்திய பாஜக அரசு கொண்டுவந்த வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் இதனால் இஸ்லாமியர்களின் வக்பு சொத்து பறிக்கப்படும் சூழல் ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர் சட்டத்தின் பாதிப்புகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றியனர் இதனைத் தொடர்ந்து செய்திகளை சந்தித்து பேசியதுமத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் கண்டனம் தெரிவித்து வருகிறோம் மத்திய அரசு சர்வ அதிகாரம் சட்டத்தை கொண்டு வருகின்றது.உச்ச நீதிமன்றம் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் இல்லையெனில் நாடு முழுவதும் போராட்டம் தொடரும்.