வேலூர்:பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற வேண்டி அதிமுக சார்பில் வெள்ளி தேர் இழுப்பு!
5/10/2025
0
வேலூர் மாநகர மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெறுவதற்காக வெள்ளி தேர் இழுக்கும் நிகழ்ச்சி புதிய பேருந்து நிலையம் ஶ்ரீசெல்லியம்மன் கோவிலில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் ஏ.கே.பாஸ்கர், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஆர்.உமாநாத் ஆகியோர் செய்திருந்தனர். சிறப்பு விருந்தினராக அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே.அப்பு கலந்து கொண்டு வெள்ளித்தேரினை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.இதில் மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி, துணை செயலாளர்கள் ஜெ.பி(எ) ஜெயப்பிரகாஷ், உமா விஜயகுமார், அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் ஏ.ஏ.தாஸ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திருமால், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அமர்நாத், தகவல் தொழில்நுட்ப அணி ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் சி.கே.சிவாஜி, பகுதி செயலாளர்கள் எஸ்.குப்புசாமி, நாகு (எ)நாகராஜ், ஜனார்த்தனன், சொக்கலிங்கம், பிற அணி செயலாளர்கள் எஸ்.பி.ராகேஷ், ஷீலாராஜன், ராஜேஷ், பாலச்சந்தர், அருண்குமார், எம்.ஏ.ராஜா, டி.டி.ரகு, சூளை ஆனந்தன், வி.எல்.ராஜன்,ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ்.சுபாஷ்,சின்னதுரை,ஶ்ரீசைலம்,பேரூர் செயலாளர் ஜெயராமன்,மாமன்ற உறுப்பினர்கள் எழிலரசன், ராஜேஸ்வரி சோமு, சரவணன், ஜானகிராமன், லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.