வேலூர் மாவட்டம்:காட்பாடி செங்குட்டையில் கராத்தே பெல்ட் பயிற்சி மற்றும் முகாம்!!!

sen reporter
0

வேலூர் மாவட்டம் ,காட்பாடி செங்குட்டை திரௌபதி அம்மன் கோயில் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் ஓகிநவா கோஷிக்கி கோஜூர்யூ கராத்தே டூ செய்ட்டூ சக்கமோட்டா ஷிர்ன்கான் -இந்தியா கியூ கிரேடிங் எக்ஸாமினேஷன், காட்பாடி கிளையின் சார்பில் கராத்தே பெல்ட் மாற்றும் முகாம் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடைவிடாது நடந்தது. இதில் கராத்தே பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் பல்வேறு நிலைகளில் தேர்வாகி கராத்தே பெல்ட்டுகளை பெற்றுச் சென்றனர். அத்துடன் பல்வேறு போட்டிகளில் பங்குபெற்ற கராத்தே வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 7வது டான் கருப்பு பெல்ட் அனைத்து ஏசியா மற்றும் மிடில் ஈஸ்ட் சீஃப் இன்ஸ்பெக்டர் டெக்னிக்கல் டைரக்டர் ஓகே ஜி கே எஸ் மாஸ்டர் கியோசி எஸ். கோபி (சென்னை) சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கராத்தே பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பெல்ட்டுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். காட்பாடி கிளையின் கராத்தே பயிற்சியாளரும் முதல் டான் கருப்பு பெல்ட் பெற்ற ஏ. அமுதா மற்றும் பயிற்சி பெற்ற கராத்தே மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவர்களுடன் இந்த பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த கராத்தே பெல்ட் மாற்றுமுகாம் மற்றும் சான்றிதழ் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேலாளர் தொழிலதிபர் அச்சுதன் மிகச் சிறப்புடன் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top