கோவை:500, 1000 பழைய ரூபாய் நோட்டுகள் மாற்ற முடியாமல் பரிதவிக்கும் 78 வயது மூதாட்டி தீக்குளிக்க போவதாக வேதனை !!!

sen reporter
0

கோவை, சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி தங்கமணி. இவரது மகன் செந்தில்குமார் லாரி ஓட்டுனராக இருந்து வந்து உள்ளார். கடந்த 2018 ம் ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் லாரி ஓட்டில் சென்ற போது உயிரிழந்து உள்ளார். அவரது வீட்டில் இருந்த பையில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்ததாகவும், அதனை வங்கிக்கு சென்று மாற்ற அவரது தாயார் 78 வயது மூதாட்டி தங்கமணி முயன்ற போது முடியவில்லை, மேலும் இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான்கு முறைகளுக்கு மேலும் வந்ததாகவும், ஆனால் தற்பொழுது மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கேட்ட போது. இந்தப் பணத்தை மாற்ற முடியாது என அவர் கூறியதாக தெரிவித்தவர். 

மேலும் இது குறித்து அவர் கூறும் போது :பழைய நோட்டுகள் 15 ஆயிரம் ரூபாய் செலுத்த முடியவில்லை என்றும், கடந்த நான்கு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததாகவும், வங்கிகளும் செலுத்த முடியாது என கூறினார்கள் எனக் கூறியவர், இந்த ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கொண்டு நாங்கள் ஏழைகள் என்ன செய்வது ? என்றும்,தெரியவில்லைஎன்றார். தனக்கு கைகள் இரண்டும் வேலை செய்யாது என்றும், மாதம் முதியோர் ஓய்வூதியம் 1,500 ரூபாய் வருவதாகவும், அதை வைத்து தான் பிழைத்துக் கொண்டு உள்ளதாக கூறியவர், இந்தப் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடிந்தால் பெட்டிக் கடை போன்ற ஏதாவது வைத்துக் கொள்ளலாம் என இந்த பணத்தை மாற்ற கொண்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தவர், ஆனால் மாவட்ட ஆட்சியர் மாற்ற முடியாத என விளக்கமாக தெரிவித்ததாக கூறினார். அடுத்த முறை வந்து தீக்குளிக்கப் போவதாக கூறிய மூதாட்டி. வேறு வழி இல்லை என்றும் 15 ஆயிரம் ரூபாய்க்காக வேண்டி ஒரு உயிரை விட்டு, விடலாம் என்றவர். இந்தியாவில் மாற்ற முடியவில்லை என்றும், அரசாங்கம் அடித்த நோட்டுகள் தானே நாங்கள் அடிக்கவில்லை எனவும்,ஏழைகளின் வயிற்றில் ஏன் ? இப்படி அடிக்கிறார்கள்என்றுபுலம்பினார். இதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரி ஒருவர் இருந்ததாகவும் அவர் இந்த பணத்தைக் கொண்டு போய் தீயிட்டு கொளுத்து என்று கூறியதாகவும், நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த தேசத்தந்தை காந்தி புகைப்படம் உள்ளதால், நான் மாலையாக போட்டுக் கொள்வேன் தவிர தீயிட்டுக் கொழுத்த மாட்டேன், காந்திக்கு தீய வைக்க மாட்டேன் என்றார்.இந்த நோட்டுக்களை மாற்ற என்ன ? செய்வது என்று தெரியவில்லை என்றவர், மேலும் மாவட்ட ஆட்சியர் முன்பு தீக்குளிக்கும் போராட்டத்தை அறிவிக்க உள்ளதாகவும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தான் பாதிக்கப்பட்டது போல் மற்ற யாரும் பாதிக்கப்படக் கூடாது என்றும் வேதனையுடன் கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top