திருத்தணி தொகுதி நொச்சிலி கிராமத்தில், மாற்றுக் கட்சிகளிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் த.வெ.க.வில் இணைந்தனர்!!!
6/30/2025
0
திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருத்தணி தொகுதி, பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றியம், நொச்சிலி கிராமத்தில், மாவட்ட செயலாளர் டில்லிபாபு முன்னிலையில் திமுக, அதிமுக, வி.சி.க போன்ற கட்சிகளில் இருந்து 500கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இதனைத்தொடர்ந்துஅனைவருக்கும் த.வெ.க உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மகளிர் அணி சார்பில் வெண்மதி மற்றும் கிளைச் செயலாளர் முருகேசன் ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
