குறிப்பாகபாகுபலி,ஆர்.ஆர்.ஆர்.போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய பீட் டிரேப்பர் திரைப்படங்களில் தற்போது வி.எஃப்.எக்ஸ்.துறையின் பயன்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய, ஜே.டி.கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரான டாக்டர் சஞ்சித் தனராஜன் அகாடமிக் கல்வி மற்றும் தொழில்துறை இடையேயான இடைவெளியை நீக்கும் நோக்கில் செயல்படும் எதிர்காலத்தை நோக்கி உருவாக்கப்பட்ட மீடியா கல்வி நிறுவனம். கோவை நகரத்தில் உள்ள மூன்று மையங்களில் 3,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளதாகவும்,. JD நிறுவனம் டிசைன், மீடியா மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்பு சார்ந்த பாடநெறிகளை வழங்குவதாக தெரிவித்தார்.நிகழ்ச்சியில்,உலக வடிவமைப்பு கவுன்சிலின் இந்தியத் தலைவர் பிலிப் தாமஸ், டி.பி.ஐ.எம்.ஏ.இந்திய தலைமை அதிகாரி ஜேசுராஜா,இயக்குனர் ஜான் பால் சுவாமிநாதன், ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பொன்னுசாமி உட்பட பலர் கலந்துகொண்டு இரண்டு நிலை கொண்ட இந்த ஒரு வருட தொழில்முனைவு டிப்ளமா பயிற்சியில்,, 8 மாதங்கள் திரைத்துறை சார்ந்த மீடியா மேலாண்மை, எடிட்டிங், மோஷன் கிராபிக்ஸ், சவுண்ட் டிசைன், கலர் கிரேடிங், ஃபினிஷிங் என போஸ்ட் புரொடக்ஷன் சார்ந்த ஆழ்ந்த பயிற்சிகளும், 1 மாதம் பாரிஸில் முழுநேர வசிப்புடன் கூடிய பயிற்சியும். வழங்க உள்ளது குறிப்பிடதக்கது….