கோவை:ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை விமான பைலட்டுகள், பயிற்சி மாணவர்கள் அஞ்சலி!!!
6/24/2025
0
கடந்த ஜூன் 12-ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளான சம்பவம் அனைத்து மக்களிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். மேலும்விபத்து நடந்த இடத்திலிருந்த பலருக்கும் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த ஹாப்ஸ் ஏவியேஷன் எனும் அகாடமி சார்பில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காந்திபார்க் பகுதியிலநடைபெற்றது.விண்ணுக்கு ஓர்கடிதம்என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில்விமானத் துறையை சேர்ந்த மாணவர்கள் அந்த அகாடமியில் ஊழியர்கள் விமான பைலட்டுகள் ஆகியோர் பங்கேற்று மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் ரோஜாப்பூ மற்றும் வெள்ளை பலூனை கையில் ஏந்தி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.