சாதாரண நிறுவன மட்டத்திலும் பசுமை ஆற்றல் மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சென்னை IITM Madras ஆராய்ச்சி பூங்காவின் கூரைக்கு மேல் சூரியப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. இங்கு 90% மின் தேவை (45 மெகாவாட்/நாள் ஒன்றுக்கு) சூரிய மற்றும் காற்றாலை மூலமாகவே கிடைக்கிறது. இதற்குப் பிறகு, ஆராய்ச்சி பூங்காவில் தனித்துவமான சூரிய மற்றும் காற்றாலை உற்பத்தி நிலையங்களும் உள்ளன.
மின்நிலையளவிலான (Grid-Scale) பேட்டரிகள் உருவாக்கத்தில் ஈடுபட்டு வரும், ஐ.ஐ.டி.எம். ரிசர்ச் பார்க் (IITM Research Park)-இல் இயங்கும் பேட்டரி பொறியியல் மற்றும் மின்சார வாகனக் கழகம் (Centre for Battery Engineering & Electric Vehicle - CBEEV), சூரிய சக்தி 24x7 வழங்குவதற்காக பெரிய அளவில் சேமிக்கக்கூடிய பேட்டரிகளின் பங்களிப்பை அளிக்கிறது. பேட்டரி தொழில்நுட்பத்தின் செலவைக் குறைக்கும் நோக்கில் CBEEV தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது, தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் (Lithium-Ion) பேட்டரிகளுக்கு மாற்றாக, சோடியம்-சல்பர் (Sodium-Sulphur), நிக்கல்-குளோரைடு (Nickel-Chloride), மற்றும் ரெடாக்ஸ்-ஃப்ளோ (Redox-flow) பேட்டரிகள் போன்ற மாற்றுத் தொழில்நுட்பங்களை உருவாக்கு முயற்சியில் உள்ளது. இந்த முயற்சிகள், இந்தியாவுக்குப் பயனளிக்கக்கூடியவையாகவும், ‘ஆத்மநிர்பர்’ (சுயநிறைவு) என்ற நோக்குடன் பசுமை ஆற்றல் துறையில் முன்னேற்றத்தைத் தூண்டக்கூடியவையாகவும் இருக்கின்றன.
மத்திய அரசின் PLI (தொழிற்சாலைக்கானஊக்கத்திட்டம்திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் ஊக்கத் தொகைகள், தமிழ்நாட்டில் ‘டாடா பவர் லிமிடெட்’ நிறுவனத்தால் 4.3 ஜிகாவாட் சூரிய செல் மற்றும் கூறுகள்உற்பத்திசெய்யும்இந்தியாவின்மிகப்பெரியதொழிற்சாலையைதிருநெல்வேலியில் அமைக்கச் செய்துள்ளது.இந்திய அரசின் ஒருங்கிணைந்த மற்றும் தொடர்ச்சியான முயற்சிகள், நிலைத்துறைக் குறிக்கோள்களை (SDGs) கருத்தில் கொண்டு, நாட்டை புதுப்பிக்கத்தக்க பசுமை பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் ‘விஸ்வ குரு’ (உலகின் முன்னணி) நாடாக மாற்றும் நோக்குடன்மேற்கொள்ளப்பட்டுள்ளன.கார்பன் வாயு உமிழ்வை கணிசமாகக் குறைத்தும், ‘Viksit Bharat @ 2047’ என்ற இலக்கை அடைவதிலும் தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது.
