பேக்கர் ஹியூஸ் நிறுவனத்தின், மாநில மேலாளர், திரு முருகானந்தம் மற்றும் மூத்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மேலாளர் திரு. ஜெயகணேஷ் ஆகியோர் முன்னிலையில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.ரோட்டரி கோயமுத்துர் ஸ்பெக்ட்ரம் சங்க தலைவர் ரோட்டேரியன். சி. அசோகன், செயலாளர் ரோட்டேரியன் டி. ஷாஃபிக் அஹமது, மற்றும் திட்டத் தலைவர் ரோட்டேரியன். சம்பத்குமார் வேலுசாமி அவர்களின் வழிகாட்டுதலால் இந்த நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு பெற்றது.இது வெறும் வாகன விநியோகம் அல்ல் இது வாழ்வை மாற்றும் ஒரு வலிமை வாய்ந்த பயணத்தின் தொடக்கம் என்று திட்டத் தலைவர் ரோட்டேரியன். சம்பத்குமார் உரையாற்றினார்.இந்த வாகனங்களின் விலை ரூபாய் 4,50,000/-, கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஸ்பெக்ட்ரம் மற்றும் பேக்கர் ஹியூஸ் நிறுவனம் இணைந்து ரூபாய் 2,50,000/- நிதியுதவி வழங்கியுள்ளனர், அரசாங்க மானியமாக ரூபாய் 1,00,000/-, மீதம் ரூபாய் 1,00,000/- பயனாளிகளுக்காக எங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கடன் ஆகும். இது பயனாளிகளால் 24 மாதங்களில்திருப்பிச்செலுத்தப்படும்இதுகோயம்புத்தூரில் உள்ள டெக்சன்மோட்டார்ஸ்நிறுவனத் தினால்தயாரிக்கப்பட்ட வாகனங்கள் ஆகும்.
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் சிங்கப்பெண்ணே மின்சார ஆட்டோ வழங்கும் விழா!!!
6/25/2025
0
கோயம்புத்தூர்,,பெண்களுக்கான வாழ்வாதார தன்னிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் தலைமையில் சிங்கப்பெண்ணே மின்சார ஆட்டோ வழங்கும் விழா இன்று 2025 ஜூன் 25 அன்று கோயம்புத்தூரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பேக்கர் ஹியூஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வின் ஒத்துழைப்புடன், நிதியழுத்தமுள்ள பெண்களுக்கு மின்சார ஆட்டோக்கள் வழங்கப்பட்டன. இது மகிழ்வுடன் துவக்கப்படும் ஒரு புதிய வாழ்வின் அடையாளமாகஅமைந்தது. விழாவுக்கு தலைமை விருந்தினராக பிரிகால் லிமிடெட், தலைவர் மற்றும் சிறுத்துளி அறக்கட்டளை நிர்வாகி திருமதி. வனிதா மோகன் அவர்கள் கலந்துகொண்டு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். ரோட்டரி மாவட்டம் 3201-ன் ஆளுநர் (2025 - 26) ரோட்டேரியன் செல்லா கே. ராகவேந்திரன், மாவட்ட தொழில்முறை சேவை இயக்குநர் ரோட்டேரியன் பி. பி. லக்ஷ்மணன், உதவி ஆளுநர் ரோட்டேரியன். சி. எஸ். திருமுருகம் மற்றும் ஜிஜிஆர் ரோட்டேரியன். விக்னீஷ் ஆகியோரும் பங்கேற்று உற்சாகம் அளித்தனர்.