திண்டுக்கல்:ரெட்டியார்சத்திரத்தில் வடக்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கான கூட்டம் நடைபெற்றது!!!
6/25/2025
0
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியம் நீலமலைக்கோட்டை, பலக்கனூத்து, புதுச்சத்திரம் ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கான வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் வாக்குச்சாவடி முகவர்களுக்கான (BLA-2) (BLC) ஆலோசனைக் கூட்டம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி அவர்கள் தலைமையில் வாக்குச்சாவடி முகவர்களிடம் தனித்தனியாக கருத்துக்களை கேட்டறிந்து வருகிற சட்டமன்ற தேர்தல் பணியில் குறித்து ஆலோசனை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் காமாட்சி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் சத்தியமூர்த்தி, வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் புதுக்கோட்டை ரமேஷ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்புலட்சுமி சண்முகம், முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் ராஜேஸ்வரி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, கொம்பன் என்ற பாலசுப்பிரமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதா தேவி சாமிநாதன், அன்பரசு, லட்சுமி, மாணவர் அணி அமைப்பாளர் செல்வராஜ், அவைத்தலைவர் வெள்ளையன் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.