கோவை:ஆர். ராசாவை கண்டித்து கோவையில் பா.ஜ.க புகார் !!!
6/27/2025
0
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படும் தி.மு.க எம்.பி. ஆர். ராசாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, பா.ஜ.க சார்பில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.புகார் மனுவை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் பேசும்போது மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த உரையை ஆர். ராசா முற்றிலும் தவறாக, அவதூறாகவும், பாராளுமன்றத்திற்கே ஏற்படாத வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்து உள்ளார். அவருக்குப் பின்னால் இருக்கும் அதிகார மையங்களின் ஆதரவுடன் அவர் இவ்வாறு வெளிப்படையாக பேசுகிறார். இது மிகவும் கவலைக்குரியது," என்று கூறினார். மேலும் இவ்வகை தவறான பேச்சுக்கு எதிராக நாடு முழுவதும் பா.ஜ.க சார்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட ஒரு சாதாரண குடிமகனுக்குக் கிடைக்கும் மரியாதையை அளிக்காமல் பேசுவது கண்டிக்கத்தக்கது. இதே ஆர். ராசா ஏற்கனவே பலமுறை இந்து சமுதாயத்தை புண்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு உள்ளார், என அவர் குற்றம்சாட்டினார்.இது குறித்து முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்திய கோவை மாவட்டத்தின் முன்னாள் தலைவர் பாலாஜி உத்தமராமசாமி கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் இருந்தார். ஆனால் தவறு செய்தவர் மட்டும் இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிவது, திராவிட மாடல் அரசின் இருமுக நெறிமுறையைக் காட்டுகிறது, என அவர் குற்றம்சாட்டினார்.சாதாரணமாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து தி.மு.க அரசின் பாசிச போக்கை வெளிக்கொணர்கிறார்கள். அதேசமயம், தங்களது கட்சியின் உறுப்பினர்கள் செய்யும் தவறுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை என குற்றம் சாட்டினார்.