கோவை:உலக போதை ஒழிப்பு தினம் போதை இல்லா பாதை கோவை காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் !!!
6/27/2025
0
கோவை டவுன்ஹால் பகுதியில், உலக போதை ஒழிப்பு தினத்தை ஒட்டி, காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு, மற்றும்தனியார் தொண்டு நிறுவனம்இணைந்துபோதையில்லா கோவை மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில் கோவை மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர்உம்மர்கத்தாப்தலைமையில் நடைபெற்றது இதில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அழகு ஜெயபாலன். மாநகர மேயர் ரங்கநாயகி. துணை மேயர் வெற்றிச்செல்வன்.மற்றும் கவுன்சிலர்கள் காயத்ரி காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் போதைக்கு எதிராக கையெழுத்திட்டனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதவும் கரங்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் உம்மர் கத்தாப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசும் போதுஉலக போதை ஒழிப்பு தினமான இன்று போதையில்லா கோவையை உருவாக்க வேண்டும் என்றும் அடிப்படையில் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு சார்பாகவும், உதவும் கரங்கள் அறக்கட்டளையின் சார்பாகவும் போதை ஒழிப்பு கையெழுத்து பிரச்சாரம் நடத்தப்பட்டு வருவதாகவும், அந்த கையெழுத்து பிரச்சாரத்தை கோவை மேயர் துவங்கி வைத்து உள்ளதாகவும், துணை மேயர் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்களும், சென்னை மொபைல்ஸ் உரிமையாளர், அனைவரும் சேர்ந்து இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்ததாகவும் கூறியவர்,போதை என்பது தமிழக முழுவதுமாக சிறுவர்கள் இடத்தில் மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கி கொண்டு உள்ளதாகவும், இதனை அடுத்து போதைக்கு எதிராக இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்று உதவும் கரங்கள் அறக்கட்டளை உருவாக்கி ஆங்காங்கே உருவாக்கிறார்கள்.