கோவை சுந்தராபுரத்தில் செட்டிநாடு அசைவ உணவிற்கு பிரபலமான ஓட்டல் ஆனந்தம் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு துவங்கப்பட்டது!!!
6/28/2025
0
கோவை சுந்தராபுரத்தில் செட்டிநாடு அசைவ உணவிற்கு பிரபலமான ஓட்டல் ஆனந்தம் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டுதுவங்கப்பட்டது. கோவை சுந்தராபுரம் பொள்ளாச்சி பிரதான சாலையில் ராமராஜ் காட்டன் எதரில் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக ஓட்டல் ஆனந்தம்இயங்கிவருகிறது. செட்டிநாட்டு சைவ,அசைவ உணவுகளுக்கு அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இயங்கி வந்த ஆனந்தம் ஓட்டல் தற்போது நவீன வகையில் குளிர்சாதன வசதிகளுடன் புதுப்பக்கப்பட்டு அதற்கான துவக்க விழா நடைபெற்றது.ட்டல் உரிமையாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இதற்கான துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தி.மு.க பிரமுகர் குறிச்சி பிரபாகரன், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன், மாமன்ற உறுப்பினர்கள் அழகு ஜெயபால், குணசேகரன்,மற்றும் , ஹோட்டல் அசோசியேஷன் தலைவர் கே. ராமசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு ஓட்டலைதிறந்துவைத்தனர். புதுப்பிக்கப்பட்ட ஹோட்டல் ஆனந்தம் குறித்துஉரிமையாளர்கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில் பாரம்பரிய செட்டிநாடு உணவு அசைவ உணவு வகைகள் அனுபமிக்க சமையல் கலைஞர்களை கொண்டு தயாரித்து இங்கு வழங்கப்படுவதாக தெரிவித்தார். குறிப்பாக காலை இட்லி குடல் குழம்பு ,சிக்கன் வெள்ளை குழம்பு,மட்டன் குழம்புடன் பரிமாறப்படுவதாக தெரிவித்த அவர்,அசைவ உணவு வகைகளில் எங்களது பிரத்யேக தயாரிப்பாக செட்டிநாடு சிக்கன், சிக்கன் உப்பு கறி, சிக்கன் தொக்கு, மட்டன் தொக்கு, நண்டு தொக்கு, கருவாடு குழம்பு உள்ளிட்ட அசைவ உணவுகளும், பிரியாணி வகைகள், புரோட்டா வகைகள், சிக்கன் கறி தோசை, மட்டன் கறி தோசை, நான்,ரொட்டி, தந்தூரி உள்ளிட்ட உணவுகளும், சைவ உணவுகளும் தனித்துவமான சுவைகளில் இங்கு வழங்கப்படுவதாகதெரிவித்தார். துவக்க விழாவை முன்னிட்டு முதல் மூன்று நாட்கள் சிறப்பு ஆஃபர்களும் இருப்பதாக அவர் கூறினார்.