கோவை:கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 16 வது பட்டமளிப்பு விழா!!

sen reporter
0

கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16 வது பட்டமளிப்பு விழா கல்லூரிக் கலையரங்கத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும் தலை சிறந்த மாணவர்களை உருவாக்கி வருவதில் தனித்தன்மையுடன் செயல்பட்டு வரும் கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 16 வது பட்டமளிப்பு விழா கே.கோவிந்தசாமி கலைஅரங்கத்தில்நடைபெற்றது. கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் முனைவர் திரு அசோக் பக்தவத்சலம் தனது வரவேற்பு உரையில் ஒவ்வொரு மாணவரின் கடின உழைப்பும், பெற்றோர்கள் கேஜி கல்வி நிலையத்தின் மீது வைத்த நம்பிக்கையும் இந்த வெற்றியை வழங்கியுள்ளதுஎன்றுவாழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. இரத்தினமாலா கல்லூரியின் ஆகச் சிறந்த செயல்பாடுகள் குறித்த அறிக்கையினை வாசித்து வழங்கினார். மணிப்பால் குழுமத்தின் பெருநிறுவன வளர்ச்சித் துறையின் முன்னாள் துணைத் தலைவரும், Stay Still Scale High - நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமாகிய உயர்திரு நவநீதகிருஷ்ணன் சங்கரையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1308 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார்.சிறப்பு விருந்தினர் தனது பேருரையில் கல்வியின் மூலம் பெற்றுக்கொண்ட அறிவாண்மையை எதிர்கால வாழ்க்கை சிறக்க பயன்படுத்த வேண்டும் என்பதனையும், கலை அறிவியல் துறையில் சாதித்தவர்களே உலகளவில் சாதனை படைத்தவர்களாக திகழ்கிறார்கள் என்றும் எடுத்துரைத்தார். பதிநான்கு பல்வேறு துறை சார்ந்த இளங்கலை மற்றும் ஐந்து முதுகலை பயின்ற இளம் பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றுக்கொண்டு சமூகப் பொறுப்புணர்வோடும், உறுதியுடனும் செயல்படுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.பாரதியார் பல்கலைக்கழக தரவரிசையில் 39 மாணவ மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். அவற்றுள் ஆறு மாணவ மாணவிகள் தங்க பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.1179 இளங்கலை மாணவர்களுக்கும், 129 முதுகலை மாணவர்களுக்கும் இவ்விழாவில் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெ. இரத்தினமாலா மற்றும் செயலர் முனைவர் பா. வனிதா ஆகியோர் விழாவை சிறப்பாக வழிநடத்தினர். பல்வேறு பாடப்பிரிவுகளைச் சார்ந்த அனைத்து துறைத் தலைவர்களும், கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டுத்துறை நிர்வாக இயக்குநர் முனைவர் த. கவிதா மற்றும் அவரது குழுவினர் மிகுந்த கவனத்துடன் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர். கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அரவிந்த்குமார் ராஜேந்திரன் விழாவின் வெற்றிக்கு ஒத்துழைப்பையும், பட்டம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இளம் பட்டதாரிகளுக்கு பெருமையுடன் பெற்றோர்களும், பேராசிரியர்களும் வாழ்த்துக்களை வழங்கி மகிழ்ந்தனர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதாக நிறைவடைந்தது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top