கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் புத்தக திருவிழாவில் புத்தகத் திருவிழாவில் வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூல் கையொப்பமிடம் நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு!!!
7/20/2025
0
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் புத்தக திருவிழாவில் புத்தகத் திருவிழாவில் வள்ளுவர் மறை வைரமுத்து உரைநூல் கையொப்பமிடம் நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கியவர்களுக்குகையொப்பமிட்டார். முன்னதாக புத்தக அரங்குகளை பார்வையிட்ட அவர் சில நூல்களை வாங்கினார்.இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய வைரமுத்து, வாசகர்கள் வரிசையில் நிற்பதை பார்க்கும் பொழுது தமிழ் வரிசையில் நின்று வாழ போகிறது என்று தெரிகிறது. புத்தகத்தில் கையெழுத்திடும் பொழுது நான் தலைகுனிந்து இருப்பேன் என் பேனா தலை குனிந்து இருக்கும் அப்பொழுது தமிழ் தலை நிமிர்ந்து நிற்கும் என்றார்.திருவள்ளுவர் தமிழர்களின் ஒரே ஒரு அடையாளம் திருக்குறள் தமிழர்களின் ஞான செல்வம், பெரியவர்கள் குழந்தைகள் முன்பு திருக்குறளை வாசிக்கும் பொழுது வாய்விட்டு வாசியுங்கள் வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் வாய்விட்டு வாசித்தால் தமிழுக்கு இருக்கின்ற நோய் போகும் என கூறினார்.