தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட்.5ம் தேதி உள்ளூர் விடுமுறை ஆட்சியர் இளம்பகவத் தகவல்!!!

sen reporter
0

தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழாவை முன்னிட்டு வருகிற 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5-ஆம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 05.08.2025 செவ்வாய் கிழமை தூத்துக்குடி மாவட்ட முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது எனதெரிவிக்கப்படுகிறது. இது செலவாணி முறிச் சட்டத்தின்படி (Negatiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக 09.08.2025 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top