தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் குறித்து ஒருமையில் பேசுவது எதிர்க்கட்சித் தலைவரின் தரத்தை காட்டுகிறது. அடிமை இயக்கம் யார் நடத்துகிறார்கள் என்பது அவர்களுக்கே புரியும். ஒவ்வொரு நாள் பிரச்சார பயணத்திலும், ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. திமுக சந்தித்த தேர்தல்களில், தோல்வியை மட்டும் எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் பரிசாக தந்து கொண்டிருக்கிறது.தாம்பரத்தில் ரெடியானபிரம்மாண்டஅரசுமருத்துவ மனை ஆக.5இல்திறப்பு எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் புரட்சி பயணம் இல்லை, புளிச்ச பயணம். தீர்வில்லாத பயணம். ஆன்மீகம் தமிழை வளர்த்தது, தமிழ் ஆன்மீகத்தை வளர்த்தது. இதில் மாற்று கருத்து இல்லை. ஆன்மீகம், தமிழ் இரண்டும் ஒன்றாக கலந்தது தான்.மக்களோடு இருக்கின்ற முதலமைச்சர் தினம்தோறும் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒட்டுமொத்த திட்டங்களையும் மக்களிடையே கொண்டு செல்ல முடியாது. மக்களின் தேவைகளை அறிந்து தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு திட்டங்களையும் கொண்டு செல்ல முடியும்” என்றார்.
சென்னை:ஆட்சிக்கு வந்ததும் திட்டத்தை செயல்படுத்த முடியாது அமைச்சர் சேகர்பாபு!
7/24/2025
0
ஆன்மீகம் தமிழை வளர்த்தது, தமிழ் ஆன்மீகத்தை வளர்த்தது. இதில் மாற்று கருத்து இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஒட்டுமொத்த திட்டங்களையும் மக்களிடையே கொண்டு செல்ல முடியாது. மக்களின் தேவைகளை அறிந்து தான் ஒவ்வொரு திட்டங்களையும் கொண்டு செல்ல முடியும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னை திரு.வி.க நகர், புளியந்தோப்பு மற்றும் கன்னிகாபுரம் பகுதியில் இன்று (ஜூலை 24) நடைபெற்ற ‘அன்னம் தரும் அமுத கரங்கள்’ நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர்கலந்துக்கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியில் எங்கே போனது அந்த வாக்குறுதி? என கேள்வி கேட்டார்.