பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அப்பகுதி பொதுமக்கள்: 84 மற்றும் 86-வது வார்டு பொதுமக்கள் பாதாள சாக்கடை,சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல 86-வது வார்டு பகுதியில் குப்பை கிடங்கு இருப்பதனால் அங்கு அதிகளவில் குப்பை கழிவுகளை கொட்டுவதனால் துர்நாற்றம் வீசுவதாலும் பொதுமக்கள் பாதித்துவருவதாகதெரிவித்தனர். மேலும் தனியாருக்கு சொந்தமான சில தொழிற்சாலைகள் அமைந்து இருப்பதனால் புகைகள் வருவதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.தி.மு.க விற்கு ஓட்டு போட்டும் தி.மு.க வில் இருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தும் ஆனால் தி.மு.க அரசு தங்கள் வார்டு மக்களை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். 86-வது வார்டு தி.மு.க கூட்டணி கவுன்சிலரும் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் தற்போது வரை இந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை.
கோவை மாநகராட்சி 84, 86 வது வார்டுகளை தி.மு.க புறக்கணிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு !!!
7/31/2025
0
கோவை மாநகராட்சி உட்பட்ட 84 மற்றும் 86-வது வார்டுகள் அன்பு நகர்,ரோஸ் கார்டன் உள்ளிட்ட பகுதிகளை தி.மு.க அரசு புறக்கணிப்பதாகவும் பொது மக்களுக்கு போதிய வசதிகள் செய்து தரவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக காத்து இருந்தனர்