கோவையில் விவசாய கிணற்றில் விழுந்த யானை உயிரிழப்பு ஜே.சி.பி எந்திரம் மூலம் உடலை மீட்ட வனத் துறையினர் !!!

sen reporter
0

கோவை அருகே உள்ள காருண்யா பகுதியில் விவசாய கிணற்றில் விழுந்து காட்டு யானை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்தது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கோவை ஆலாந்துறை அடுத்து சாடிவயலஅருகே உள்ள சோலை படுகை பகுதியில் நேற்று இரவு வனப் பகுதியில் இருந்து வெளிவந்த மூன்று காட்டு யானை, விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. உடனடியாக விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத் துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு இருந்த மூன்று காட்டு யானைகளில்  இரண்டு வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், 35 வயது மதிக்கத்தக்க ஒரு காட்டு யானை  வழி தெரியாமல் சோலைப் படுகை அருகே உள்ள விவசாய கணேசன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே சென்று கால் இடறி கிணற்றுக்குள் விழுந்தது. இது குறித்து விவசாயி கணேசன் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பெயரில் அங்கு வந்த வனத் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஜே.சி.பி, புல்டோசர் உள்ளிட்ட கனரக வாகனங்களின் உதவியுடன் யானையை மீட்க முயன்றனர். எனினும் சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, யானை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பகுதியில் முகாமிட்டு சுற்றி வந்த இந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து இருந்தனர்.

உயிரிழந்த யானையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை குற்றாலம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.விவசாய கிணற்றில் யானை விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தைஏற்படுத்திஉள்ளது.இதுகுறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறும் போது நமது காடுகளின் வளர்ச்சிக்கும், சுற்றுச் சூழல் அமைப்பிற்கும் முக்கிய பங்காற்றிய ஓர் ஆண் யானையை தற்போதுநாம்இழந்துஉள்ளதாகவும், யானைகளை காக்க ,மேம்பட்ட AI தொழில் நுட்பங்கள் மூலம் ஒரு பக்கம் யானைகளை மதுக்கரை வனப்பகுதியில் அருகே இருக்கும் ரயில் தண்டவாளங்களில் அடிபடாமல் இருக்க யானைகளை காப்பாற்றி வருவதாகவும்,ஆனால் மத்வராயபுரம் கிராமத்தில கடந்த 2.5 வருடங்களுக்கு மேலாக யானைகள் ஊருக்குள் புகுந்து பல சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல விவசாயிகள் குறிப்பாக சிறு, குறு விவசாயிகள் நஷ்டப்பட்டு வருகின்றனர்.தென்னை, வாழை மற்றும் பல வேளாண்மை பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. வீடுகள், மாட்டு தொழுவங்கள் மற்றும் ரேஷன் கடைகளுக்குசேதாரங்கள்ஏற்பட்டன. இதற்கு நிரந்தர தீர்வு எடுக்க பல முறை வனத் துறையிடம்  விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்தார்கள், முன்னாள் மாவட்ட ஆட்சியரிடம் நிரந்தர தீர்வு  எடுக்க மனு தந்தார்கள். தற்போது வரை இந்த பகுதியில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும்,மேலும் கிராம மக்கள் சார்பில் வனத் துறையிடம் குறிப்பாக தினமும் ஊருக்குள் புகும் இரண்டு காட்டு யானைகளை பிடித்து வேறு அடர் வனத்தில் விடவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கும் தீர்வு தற்பொழுது வரை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய அவர்கள்.தற்போது நாம் வாயில்லா ஜீவனை இழந்து நிற்பதாகவும்,இதற்கு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top