மிகுந்த நன்றி உணர்ச்சியுடன் இந்த அவையில் உரையாற்ற விழைகிறேன். நன்றி உணர்ச்சி என்று நான் இங்கு குறிப்பிடுவது திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மீதான நன்றி உணர்ச்சியை குறிப்பிடுகிறேன். அவர்தான் இந்த அவைக்கு என்னை அனுப்பி வைத்தார்.இடைத்தேர்தலில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நீங்கள் (அவை துணைத் தலைவர்) குறிப்பிட்டீர்கள். உண்மைதான். நான் பணியாற்றிய காலம் குறுகியதாக இருந்தாலும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளும் அனுபவங்களும் மிக மிக அதிகம். அவற்றைவிட இங்குள்ள அனைத்துக் கட்சி உறுப்பினர்களிடம் நான் பெற்ற அன்பு மிக மிக அதிகம். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் என ஒவ்வொருவரும் என் மீது காட்டிய அன்பை, நட்பை என்றென்றும் மறவேன்.தமிழகத்தின் கடைக்கோடியில் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன் நான். தொலைவில் இருந்து வியந்து பார்த்த தலைவர்களுடன் எல்லாம் நெருங்கிய பழகுகின்ற வாய்ப்பை இந்த அவை எனக்கு தந்தது. அதைவிட, அரசியலையும் சரி.. அரசாங்க நடைமுறையையும் சரி, தேசிய அளவில் ஒரு பரந்துபட்ட பார்வையில் எப்படி அணுகுவது என்ற அனுபவத்தை இந்த அவை தான் எனக்கு அளித்தது. இப்படி எத்தனையோ இனிமையான நினைவு எனக்கு.இந்த அவையில் நான் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கின்றேன். அதில் பல நிறைவேறவும் செய்திருக்கின்றன. ஒரேயொரு கோரிக்கை மட்டும் வைத்து எனது நிறைவு பேச்சை முடிக்க விரும்புகின்றேன்.தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் -பழநி போகும் வழியில் கணக்கம்பட்டி என்று ஓர் ஊர் உள்ளது. அங்கு பழனிசாமி என்ற மகான் வாழ்ந்து, தற்போது அவர் மறைந்துவிட்டார். இருப்பினும் கூட அவரது லட்சக்கணக்கான பக்தர்கள் இன்றும் சென்று வரக்கூடிய இடமாக அந்த கோயில் உள்ளது. அந்த ஊரின் வழியாக ரயில்வே இருப்புப்பாதை செல்கிறது. எனவே அந்த ஊரில் தனி ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கும்படி அந்த பக்தர்கள் என்னிடம் கூறினார்கள்.வருமானம் வருவற்கான வாய்ப்பும் உள்ளதால், அந்த கோயிலுக்கென்று தனி ரயில் நிலையம் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவாக இங்கு வைத்து, எம்.பி. என்ற பொறுப்பில் இருந்து இன்று நான் விடைபெறுகிறேன். என்றாலும் கூட சமூக நீதிக்கான திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்காக எனது குரல் என்றென்றும் தொடரும் எனக் கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைகிறேன் என்றுஎம்.எம்.அப்துல்லாபேசினார். முன்னதாக, வைகோ, வில்சன், அப்துல்லா உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவி மூலம், நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஆற்றிய பல்வேறு பங்களிப்புகளை குறிப்பிட்டு பேசிய மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், இன்று பதவியில் இரு்து விடைபெறும் தமிழக எம்.பி.க்களை வெகுவாக பாராட்டினார்.
புதுடெல்லி:சமூக நீதிக்கான எனது குரல் என்றென்றும் ஒலிக்கும் திமுக எம்.பி.யாக அப்துல்லா மாநிலங்களவையில் பேச்சு!!!
7/24/2025
0
சமூக நீதிக்கான திராவிட இயக்க கொள்கைகளுக்காக தமது குரல் என்றென்றும் தொடரும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விடைபெறும் அக்கட்சியின் எம்.பி. எம்.முகமது அப்துல்லா உணர்ச்சிப் பொங்க பேசினார்.திமுக மாநிலங்களவை எம்.பி.க்களான வில்சன், எம்.எம்.அப்துல்லா, மதிமுக எம்.பி. வைகோ, பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் ஆறு பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, இவர்களுக்கான பிரிவு உபச்சார நிகழ்வு மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது.மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திமுக மாநிலங்களவை எம்.பி. எம்.எம். அப்துல்லா பேசியதாவது: