வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!!!
7/16/2025
0
வேலூர்மாவட்டகாவல்கண்காணிப்பாளராக இருந்த மதிவாணன் சென்னை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய மயில்வாகனன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் மயில்வாகனன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 16) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை சக காவல்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.