இப்போது சேர்ந்த புதிய மாணவர்களிடம் Blind Fees என்ற பெயரில் ரூ.100 வசூலித்து உள்ளதாகவும், அதற்காக எந்த ஹெச்.ஒ.டி-க்கும் தெளிவான தகவல் இல்லை என்றும் தெரிவித்தனர். இது குறித்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இருப்பதாக மாணவர்கள்தெரிவித்துஉள்ளனர். இந்திய மாணவர் சங்கம் (AISF) கோவை மாவட்டத் தலைவர் ஜுபிகர் கூறும்போது கணிதத் துறையில் பேராசிரியர் பற்றாக்குறை மிகவும் மோசமாக உள்ளது. மொத்தமாக இருவரே உள்ளனர். மூன்றாம் ஆண்டு மாணவர் எண்ணிக்கை ஆறே பேர், இரண்டாம் ஆண்டிற்கு சேர்க்கையே இல்லை. கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளிக்காமல், வெறும் பணம் வசூலிக்கவே அதிக கவனம் செலுத்துகிறது. கழிவறை, குடிநீர், அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலைமைஉள்ளது,எனதெரிவித்தார். மாணவர்கள் குறைகளை அதிகாரிகள் தீவிரமாக எடுத்துக் கொண்டு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
கோவைஅரசுகலைக்கல்லூரியில்பேராசிரியர்இல்லாமல்வகுப்புகள்நடப்பதுஇல்லைமாணவர்கள்புகார் !!!
7/14/2025
0
கோவை அரசு கலைக் கல்லூரியில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி கல்லூரி திறந்ததில் இருந்து இதுவரை கணித பிரிவில் பல பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என மாணவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். வகுப்புகள் நடைபெறாத நிலையில் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. மாணவர்கள் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில் இதுகுறித்து பிரின்சிபாலிடம்கேட்டபோதுஜூன்30 க்குள்பேராசிரியர்கள்நியமிக்கப்படுவார்கள் என கூறினார். ஆனால் அதற்குப் பிறகும் ஆசிரியர்கள் வரவில்லை. பி.எச்.டி படிக்கும் மாணவர்களை வைத்து வகுப்பு எடுப்பதாக கூறியும் அவர்களும் சரியாக வரவில்லை. இதனால் வகுப்புகள் நடைபெறாமல் போனது.மாணவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்ட தகவல் தெரிந்ததும், அதை தடுக்க வேண்டுமென பிரின்சிபால், உங்களுக்கு சப்போர்ட் செய்யும் மாணவர்களுக்கு டி.சி கொடுக்கப்படும் என கூறியதாக மாணவர்கள்தெரிவித்துஉள்ளனர். இதனால் பிற மாணவர்கள் பயந்து விட்டு ஆதரவு அளிக்கவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.மேலும், கழிவறைகள் மிகவும் அசுத்தமாகவும், பயன்படுத்தும் போது சுகாதார பிரச்சனைகள் ஏற்படும் அளவுக்கு இருப்பதாகவும் புகார் தெரிவித்து உள்ளனர். குடிநீர் வசதி கூட இல்லை என்றும், நிர்வாகம் சில தற்காலிக வேலைகளுக்கே பணம் வசூலிப்பதாகவும் தெரிவித்தனர்.அதே போல, B.Com பிரிவில் அரசு ஒதுக்கீட்டு (Govt. Quota) இடங்கள் நிரப்பப்படாமலேயே Self-Finance மூலமாக சேர்க்கை தொடங்கி உள்ளதாகவும், ஒவ்வொரு செமஸ்டரிலும் ஹால் டிக்கெட் பீஸ் என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுகிறது என்றும் மாணவர்கள் கூறினர்.