வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகர திமுக சார்பில் திமுக உறுப்பினர் சேர்க்கை பணி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நகர திமுக நகர செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான ஆலியார் ஜூபேர் அஹமது தலைமை வகித்தார். குடியாத்தம் சட்ட மன்ற உறுப்பினர் அமுலு விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுசிறப்புரையாற்றினார். இதில் நகர திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகளான பி. சின்னா என்கிற கொற்கை பாண்டியன், நகர மன்ற உறுப்பினர்கள் டி. அப்துல் ஜமீல், நுரேசபா ஹர்ஷத் அஹமத், சுல்தானா அப்துல் பாசில் மற்றும் நகர, மாவட்ட திமுகவைச் சேர்ந்த சி. தௌபிக் அஹமத், எம். கே. ஐஹுர் அஹ்மத், 3வது வார்டு திமுக செயலாளர் சின்னா என்கிற யாக்கோபு, எல். பிரதாப் ,நகர மன்ற தலைவர் பிரேமாவின் சார்பில் அவரது கணவர் வெற்றி வேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர்:பேரணாம்பட்டில் திமுக உறுப்பினர் சேர்க்கை பணி தொடக்க விழா!!!
7/17/2025
0