வேலூரில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவசர கால மருத்துவ முதலுதவி பயிற்சி முகாம்!!!

sen reporter
0

வேலூரில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவசரகால மருத்துவ முதலுதவி பயிற்சி முகாம் வழங்கப்பட்டது.தமிழக அரசு விபத்தில்லா தமிழகம் என்ற தொலைநோக்குபார்வையைநனவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகின்றதுஅதன் ஒரு பகுதியாக தமிழக சுகாதார திட்டம் மற்றும் EMRI GHS 108 ஆம்புலன்ஸ் நிறுவனம் இணைந்து கடந்த ஆறு மாதங்களில் தமிழக முழுவதும் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படும் 50 ஹாட்ஸ்பாட்டை கண்டறிந்து, அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்மாணவர்கள்போக்குவரத்து ஊழியர்கள் என பலதரப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து விபத்து ஏற்படும் காலங்களில் செய்ய வேண்டிய அவசரகால மருத்துவ முதலுதவி குறித்து பயிற்சி முகாமினை  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினர். இந்த பயிற்சி முகாமில் குறிப்பாக ஒரு விபத்து ஏற்பட்டு ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பாக உள்ள இடைவேளையில் ஒரு சாமானிய மக்கள்எந்தமாதிரியானமுதலுதவிகளை எவ்வாறு வழங்க முடியும் என்பது குறித்துவிரிவாகஎடுத்துரைக்கப்பட்டது. மேலும் இதர மருத்துவம் சார்ந்த அவசரகால சூழ்நிலைகளான மூச்சுத் திணறல், நெஞ்சுவலி, விஷக்கடி, நீரிழிவு நோயினால் ஏற்படும் காலங்களில் செய்ய வேண்டிய முதலுதவி குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமியின் மேற்பார்வையில் நடந்த இந்த பயிற்சி முகாமில் 152 நபர்கள் பங்கு பெற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கினார். இந்த முகாமில் பங்கு பெற்ற அனைவருக்கும் மருத்துவ உதவி குறித்து வகுப்பறை மற்றும் செய்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும் இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் அடிப்படை மருத்துவ உதவிக்கான கையேடு மற்றும் பயிற்சி பயிற்சிக்கானசான்றிதழ்கள்வழங்கப்பட்டன. மேலும் இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்  ஆக்னஸ் பியூலா, 108 ஆம்புலன்ஸ்  மருத்துவ அலுவலர் கீர்த்திவர்மன் மற்றும் வேலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளர் கண்ணன் ஆகியோர் பங்கு பெற்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top