குறிப்பாக, 12% இல் இருந்து 5% சலுகைக்குத் மாற்றப்படும் பொருட்கள், பெரும்பாலும் ‘சாதாரண மக்களுக்கு’ பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அவை பெரும்பாலும் அன்றாடப் பயன்பாட்டு பொருட்களாகும். உதாரணமாக: ‘உணவுப் பண்டங்கள், வெண்ணெய், நெய் மற்றும் பிற கொழுப்பு சார்ந்த பொருட்கள், பழச் சாறு அல்லது பழ பானங்கள், சானிடரி நாப்கின்கள், சோப்பு, ஷாம்பூ, கழிவறைப் பொருட்கள் ஆகியவை. மேலும், 28% இல் இருந்து 18% வரிச் சலுகைக்கு மாற்றப்படும் நுகர்வோர் வாங்கும் பொருட்கள் (consumer durables) கார்கள், ஏர் கண்டிஷனர், ஃப்ரிட்ஜ் போன்றவை நடுத்தர வர்க்க நுகர்வோருக்கு நன்மையாக இருக்கும்.
இந்த வரிச்சலுகை மாற்றங்கள் நுகர்வோர் விலை குறிப்பெண் (CPI) 50–60 அடிப்படை புள்ளிகளால் குறையும். உணவு மற்றும் பானத் துறையில் மிகப்பெரிய தாக்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி கணிப்பில், இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் ஆண்டின் போக்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) 60 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தும் என்கிறது.
முக்கியமாக, மத்திய அரசு ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக 40% ‘பாவ வரி’ (Sin rate) அறிமுகப்படுத்தும் முன்மொழிவும் உள்ளது. இது சிகரெட், புகையிலை, ஆன்லைன் கேமிங் சேவைகள் போன்ற அடிமை பழக்கத்திற்குரிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும். இதன் நோக்கம் மக்கள் இவற்றில் சிக்கி அடிமையான நிலைக்கு தள்ளப்படுவதைத் தடுப்பது. மேலும், ஜிஎஸ்டி நிலையான விகிதங்களுக்கு அப்பாற்பட்டு உள்ள அனைத்து ‘செஸ்’ (cess) வரிகளையும் ரத்து செய்யும் திட்டம் உள்ளது. இதன் முக்கிய நோக்கம் தனியார் துறையை ஊக்குவிப்பதாகும்.
நுகர்வு செலவினம். சீர்திருத்தங்கள் சரியான நேரத்தில் சிந்திக்கப்பட்டுள்ளன, இது நாட்டு மக்களின் மாறிவரும் நுகர்வு பழக்கத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கின்றன. இது புள்ளியியல் மற்றும் செயலாக்க அமைச்சகம் மேற்கொண்ட சமீபத்திய குடும்ப நுகர்வு செலவினக் கணக்கெடுப்பு – 5 (HCES-5) மூலம் வெளிப்பட்டது.
2017 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி (GST) முறைமை, ஒன்றிய பட்ஜெட்டிற்கு கிட்டத்தட்ட 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் நிகர வருவாயை ஈட்டியது. இதன் மறுசீரமைப்பு, வரி அடிப்படையை பெரிதும் விரிவாக்குவதோடு, உலகளாவிய சவால்களின் நடுவே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். மேலும், இந்தியாவை 2027க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயர்த்தும் நிலையில் கொண்டு செல்கிறது.
