பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி எல்லைகள் கடந்த மனித நேயம் ஆண்டின் 13 சங்கங்களின் பதவி ஏற்பு விழா ஒரே மேடையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.சுந்தராபுரம் லிண்டஸ் மகாலில் நடைபெற்ற இதில், பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் கீழ் வரும், கோயம்புத்தூர் வாரியர்ஸ் சின்னவேடம்பட்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் கோயம்புத்தூர் சேலஞ்சர்ஸ் கோயம்புத்தூர் கிரியேட்டர் கோயம்புத்தூர் எண்டர்பிரனர் கோயம்புத்தூர் கோவை ஸ்மார்ட் சிட்டி கோயம்புத்தூர் மெரிட் கோயம்புத்தூர் நேரு நகர் கோயம்புத்தூர் பட்டீஸ்வரா கோயம்புத்தூர் ராயல் பொள்ளாச்சி எக்ஸலென்ஸ் பொள்ளாச்சி ராயல்ஸ் சிறுகலந்தை ஆகிய 13 சங்கங்களின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர்.விழாவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகஜி.எஸ்.டி.ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில் குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் 23 வது வட்டார தலைவர் சுப்பு செந்தில் குமார்,,19 வது வட்டார தலைவர் அருண்குமார்,24 வட்டார தலைவர் ராம பிரபு, 21 வது வட்டார தலைவர் விவேக் குமார்,11 வது வட்டாரத் தலைவர் ரமேஷ் குமார்,26 வது வட்டாரத் தலைவர் மோகன் ராஜ்,5 வது வட்டாரத தலைவர் ஜெயபிரகாஷ் 3 வது வட்டார தலைவர் நாகமாணிக்கம் ஆகியோர் இணைந்துஒருங்கிணைத்தனர்.விழாவில் பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்ட ஆளுநர் ராஜசேகர் விழாவை தலைமை தாங்கி துவக்கி வைத்து,சிறப்புரையாற்றினார்..
முன்னால் ஆளுநர் ராம்குமார் புதிய நிர்வாகிகளிடம் உறுதி மொழியை ஏற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இதைத்தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மாவட்ட ஆளுநருமான டாக்டர் பழனிச்சாமி புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார்.நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளர்களாக முன்னால் ஆளுநர்கள் நித்யானந்தம், டாக்டர் சாரதாமணி பழனிசாமி,டாக்டர் ஜீவானந்தம்,கருணாநிதி மற்றும் முதல் துணை நிலை ஆளுநர் ராஜசேகர் இரண்டாம் துணை ஆளுநர் சூரி நந்தகோபால், மற்றும் ஜி.எல்.டி ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர்,மாவட்ட அமைச்சரவைசெயலாளர்ரவிசங்கர் ஆகியோர் சேவை திட்டங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்,
பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் பல்வேறு சேவை திட்டங்கள் ரூபாய் பத்து லட்சத்திற்கு மேல் செயல்படுத்தப்பட்டன.இதில் பெண்களை தொழில் முனைவோர்கள் ஆக்கும் வகையில் இலவச தையல் இயந்திரம், மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் தோறும்கல்விஉதவிதொகை,மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இதே போல தற்போது செயல்படுத்தி வரும் பல்வேறு சமூக நல திட்டங்களான குழந்தைகள் மருத்துவம், கண் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உதவி தொகை வழங்குவது,கல்வி உதவி தொகை வழங்குவது, உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு செய்வது,கை,கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை,கால்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவை திட்டங்களை அனைத்து சங்க உறுப்பினர்களுடன் இணைந்து தொடர்ந்து சிறப்பாக செய்வது என முடிவு செய்யப்பட்டது..