இந்நிகழ்வில் தாய்ப்பாலின் அவசியம், ஆரம்ப ஊட்டச்சத்து மற்றும் சரியான பாலூட்டும் முறைகள் குறித்தான தகவல்கள் வழங்கப்பட்டன. மேலும் நிகழ்வில் ராவ் மருத்துவமனையின் நியோனட்டாலஜிஸ்ட் மற்றும் குழந்தை நல மருத்துவர் டாக்டர் கே.எஸ். கிருஷ்ணசாமி, பாலூட்டுதல் ஆலோசகர் திருமதி. பேபி ஸ்ரீ ஆகியோர் உரையாற்றினர். தாய்ப்பால் குறித்து நிலவும் தவறான நம்பிக்கைகள், நடைமுறைகள் மற்றும் திட உணவுக்கு மாறும் சிறப்பம்சங்கள் குறித்து அவர்கள் விளக்கமளித்தனர்.
கோவை ராவ் மருத்துவமனை சார்பில் குழந்தை வளர்ச்சிக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு!!!
8/07/2025
0
கோவை உள்ள ராவ் மருத்துவமனை சார்பில் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உதவும் வகையில், தாய்ப்பால் மற்றும் அப்பால் என்ற விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.ரோட்டரி ஆக்ருதி, பிக்கி ஃப்ளோ மற்றும் பென்டா லேடீஸ் சர்க்கிள்எண்.37ஆகியஅமைப்புகளுடன் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், கர்ப்பிணி மற்றும் புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பங்கேற்றனர்.