இதனையறிந்த அக்கம் பக்கத்தினர், அவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேதப் பரிசோதனை முடிந்து, தற்போது 4 பேரின் உடல்களையும், இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாரண்டப்பள்ளி கிராமத்திற்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று மாலை ராஜேஷ்குமாரின் குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.கோயிலுக்கு செல்வதற்காக மகிழ்ச்சியாக கிளம்பிய நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷயம் அறிந்து ராஜேஷ்குமார் உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்வதாக இருந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சத்தீஸ்கரில் வெள்ளத்தில் உயிரிழப்பு!!!
8/28/2025
0
திருப்பத்தூர்மாவட்டம்,பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (45). சிவில் இன்ஜினியரான இவர், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஜகல்பூரில் கடந்த 15 வருடங்களாக தனது மனைவி பவித்ராவுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு செளக்கியா (8), செளத்தியா (6) என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.சத்தீஸ்கரில் கடந்த சில நாட்களாக அதி கனமழை பெய்து வருவதால் அங்கு பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர். மழையால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், திருப்பதி கோயிலுக்கு செல்வதற்காக நேற்று (ஆக.27), ராஜேஷ்குமார், அவரது மனைவி பவித்ரா (38) மகள்கள் சௌத்தியா (8), சௌமிகா (6) ஆகிய நான்கு பேரும் சத்தீஸ்கரில் இருந்து காரில் புறப்பட்டனர். சுக்மாவை அடுத்த டர்பந்தனா என்ற இடத்திற்கு கார் வந்த போது, எதிர்பாராத விதமாக மழை வெள்ளத்தில் கார் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. இதில், காரில் பயணித்த நான்கு பேரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
