வேலூர் மாநகராட்சி 49 வது வார்டு கவுன்சிலர் சாலை வசதி கோரி அங்கப்பிரதட்சணம் செய்து நூதன போராட்டம்!!!
8/05/2025
0
வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு தொரப்பாடி பகுதியில் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக் கோரி பலமுறை பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனு அளித்தும் சாலை வசதி செய்து தராததால் பொதுமக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து அப்பகுதி அதிமுக வார்டு கவுன்சிலர் எஸ்.லோகநாதன் தரையில் உருண்டு மக்களுக்காக சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்து தரக் கோரி நூதன முறையில் போராட்டம் நடத்தினார்.அதாவது மழை பெய்து சாலையில் வெள்ளமென மழைநீர் தேங்கியிருந்தது. இதில் அதிமுக கவுன்சிலர் லோகநாதன் அங்கப்பிரதட்சணம் செய்து வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு தனது வார்டு பொதுமக்கள் சார்பில் எதிர்ப்பினைபதிவுசெய்தார்.லோகநாதன் அதிமுக கவுன்சிலர் என்பதால் மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆகியோர் அவரை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் விமரிசனம் செய்து வருகிறார்கள்.அப்பகுதியில் பள்ளிகளும், மருத்துவமனைகளும், கோவில்களும் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிறகாவது இந்த வார்டுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருமா? மாநகராட்சி நிர்வாகம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.