கன்னியாகுமரி:உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 52,098 மனுக்கள் பெறப்பட்டுள்ளது ஆட்சியர் தகவல்!!!

sen reporter
0

குமரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் ஜூலை 15 முதல் ஆக.12 வரை 102 முகாம்கள் நடத்தப்பட்டு 52,098 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்று ஆட்சியர் ஆர்.அழகுமீனாதெரிவித்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை கடந்த 15.07.2025 அன்று துவக்கிவைத்ததைத்தொடர்ந்து, இன்று கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் பத்மநாபபுரம் லெட்சுமி மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டுதெரிவிக்கையில் தமிழ்நாடுமுதலமைச்சர்பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் பகுதிகளிலேயே நேரிடையாக சென்று முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற, உங்களுடன் ஸ்டாலின் என்ற அற்புதமான திட்டம் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை நடத்திட அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதன்அடிப்படையில் இன்று கல்குளம் வட்டம் பத்மநாபபுரம் நகராட்சி வார்டு 10,11,12உள்ளிட்டபகுதிபொதுமக்களுக்கு பத்மநாபபுரம் லெட்சுமி மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை நேரில் பார்வையிட்டு, பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுவருவதைநேரில் பார்வையிட்டுஆய்வுமேற்கொள்ளப்பட்டது.மேலும் முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களிடம் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களை நீண்ட நேரம் காக்க வைக்காமல் துரிதமாக கணினியில் பதிவேற்றம் செய்திட முகாம் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து நமது மாவட்டத்தில் 15.07.2025முதல்12.08.2025வரை 102 முகாம்கள்நடத்தப்பட்டு52,098மனுக்கள்பெறப்பட்டுள்ளது பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளின் அருகாமையில் நடைபெறும் முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். முகாமில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபன், கல்குளம் வட்டாட்சியர் ஜாண்ஹெனி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top