இதனிடையே தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் அந்தோணி என்பவரை இலங்கை அரசு விடுதலை செய்யவில்லை. அவர் மீனவர்களின் விசைப்படகை ஓட்டி வந்ததாலும், அவர் ஏற்கனவே இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஓராண்டுக்கு மேல் சிறை தண்டனை விதித்து இருந்தது.இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அதன் அடிப்படையில் ஓராண்டுக்கு மேல் யாழ்ப்பாணம் சிறையில் இருந்த அந்தோணியை கடந்த ஒன்றாம் தேதி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து இந்திய தூதரகஅதிகாரிகளிடம்ஒப்படைத்தது.அதனைத் தொடர்ந்து, இந்திய தூதராக அதிகாரிகள் அந்தோணியை அவர்களின் பாதுகாப்பில் வைத்துக் கொண்டு மருத்துவ பரிசோதனை எமர்ஜென்சி சான்றிதழ் வழங்கி அவருக்கு விமான டிக்கெட் ஏற்பாடு செய்துஇன்று இலங்கையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். சென்னை அழைத்து வரப்பட்ட மீனவர் அந்தோணியை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அரசு ஏற்பாடு செய்து இருந்த வாகனத்தில் அவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை:இலங்கை சிறையில் தவித்த தமிழக மீனவர் ஓராண்டுக்கு பிறகு விடுதலை!!!
8/13/2025
0
ஓராண்டுக்கு மேல் யாழ்ப்பாணம் சிறையில் தவித்த அந்தோணியை கடந்த ஒன்றாம் தேதி இலங்கை அரசு விடுதலை செய்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு கடந்த ஓராண்டாக இலங்கைசிறையில்அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர் விடுதலை செய்யப்பட்டு,சென்னை அழைத்து வரப்பட்டார்தமிழகத்தின்இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் எழு பேர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி விசைப் படகில் மீன் பிடிப்பதற்காக சென்றனர். அப்போது பாம்பன் துறைமுகத்தில் இருந்து 15 கடல்மைல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.இதையடுத்து அதிகாலை நேரத்தில் மீனவர்களின் விசைப் படகை சுற்றி வளைத்த இலங்கை கடற்படை அதிகாரிகள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி அந்த 7 மீனவர்களையும் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்து இலங்கை அழைத்துச் சென்றனர். இதையடுத்து 7 தமிழ்நாடு மீனவர்களையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தார் அவர்களை மீட்டு தமிழகம் அழைத்து வர கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மீனவர்களை மீட்க அவசர கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தங்கச்சிமடம் மீனவர்கள் ஏழு பேரில் ஆறு பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.மேலும், இந்திய தூதரக அதிகாரிகள் ஆறு மீனவர்களையும் அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு மருத்துவ மற்றும் எமர்ஜென்சி சான்றிதழ் வழங்கி சென்னை அழைத்து வந்து அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
