மருத்துவமனையில் குரு பிரசாத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவனின் மூளைக்குச் செல்லும் நரம்பு குழாய்களில் ரத்தம் கட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, சிறுவனை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, குரு பிரசாத்துக்கு மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து தொடர்பாக, சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 10-க்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்ததில், விபத்து ஏற்படுத்திய நபர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லைஎனகூறப்படுகிறது. குறிப்பாக, இரு சக்கர வாகனம் மின்னல் வேகத்தில் இயக்கப்பட்டதால், அப்பகுதிகளில் இருந்த எந்த ஒரு சிசிடிவி காட்சிகளிலும் தெளிவான காட்சிகள் பதிவாகவில்லை. இதனால், குற்றவாளிகளை பிடிப்பது என்பது காவல் துறையினருக்கு பெரும் சவாலாகஅமைந்துள்ளது.இந்நிலையில், சற்றும் மனிதாபிமானம் இல்லாமல் சிறுவன் மீது இருசக்கர வாகனத்தால் மோதி விட்டு, அங்கிருந்து தப்பிச் செல்வது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனியில் பயங்கரம் 9 வயது சிறுவன் மீது அதிவேகமாக மோதிய பைக்!!
8/25/2025
0
போடி அருகே சாலையை கடக்க முயன்ற 9 வயது சிறுவன் மீது, அதிவேகமாக வந்த பைக் மோதிய வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டொம்புச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் ராமதாஸ் மற்றும் வைரமணி தம்பதி. இவர்களுக்கு குரு பிரசாத் (9) என்ற ஒரு மகன் உள்ளார். மேலும், டொம்புச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் இவர், நேற்று (ஆக.24) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், சிறுவர்களுடன் இணைந்து விளையாடிக் கொண்டிருந்தனார்.இந்த நிலையில், நேற்று காலை 11 மணியளவில் அதிவேகமாக சென்ற இரு சக்கர வாகனம், சாலையை கடக்க முயன்ற சிறுவன் குருபிரசாத் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. அதில், தூக்கி வீசப்பட்டு சிறுவன் படுகாயம் அடைந்தார். ஆனால், இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், சிறுவனை சற்றும் கண்டு கொள்ளாமல், பைக்கை அதிவேகத்தில் இயக்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.இதற்கிடையே, சாலை ஓரத்தில் சிறுவன் படுகாயமடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக குருபிரசாத்தின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, சிறுவனை மீட்ட அப்பகுதியினர், 108 ஆம்புலன்ஸ் மூலமாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
