அதன்படி, இதழியல் துறையில் ஆர்வமுள்ள இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் நோக்குடனும், தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, ஊடகக்கல்வியைவழங்குவதற்காகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு குறைந்த கட்டணத்தில், ஓர் ஆண்டு இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பை (Post Graduate Diploma in Journalism) வழங்குவதற்காகவும் சென்னை, கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றண்டு நூலகம் அருகில் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை இதழியல் கல்வி நிறுவனம்அமைக்கப்பட்டுள்ளது. இதழியல் நிறுவனத்திற்கு ரூ.7.75 கோடி ஒதுக்கீடுசென்னை இதழியல் கல்வி நிறுவனத்திற்காக 7.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பு (Post Graduate Diploma in Journalism) இந்த கல்வியாண்டு முதல் (2025 - 2026) தொடங்கப்படுகிறது. இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழியிலும்பயிற்றுவிக்கப்படுகிறது.இந்நிறுவனத்தில் அச்சு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்களில் பணிபுரிவதற்கான திறமையை வளர்த்துக்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொள்ள உள்ளது. இந்த அனுபவம், நொடிக்கு நொடி மாறி வரும் தொழில்நுட்ப யுகத்தில் அடுத்த தலைமுறையினர் தங்களை தயார் செய்து கொள்ள உதவும்.இதழியல் கல்வியை சிறப்பாக வழங்கவுள்ள, சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, இந்த கல்வி நிறுவனத்தில் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மாணவ, மாணவியர்களிடம் முதலமைச்சர் கலந்துரையாடினார்.
ரூ.51.4 கோடி செலவில் கல்விசார் கட்டடங்கள் திறப்புஇதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை சார்பில், அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி, அழகப்பா பல்கலைக்கழகம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் 51 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்கள், வகுப்பறைக் கட்டடங்கள், தேர்வுக் கூடம், ஆய்வகக் கட்டடங்கள், புத்தாக்க வளர் மையம் போன்ற பல்வேறு கட்டடங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.ரூ.5.10 கோடி செலவில் புதிய படப்பிடிப்பு தளம் திறப்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் சென்னை, தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் 5.10 கோடி ரூபாய் செலவில் முழு அளவில் புனரமைக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்பு தளத்தை காணெலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.19 புதியஅரசுதொழிற்பயிற்சி நிலையங்கள் திறப்பு இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 173.86 கோடி ரூபாய் செலவில், 19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், பெரும்பாக்கம், ஒட்டன்சத்திரம் மற்றும் கடலாடி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள், சென்னையில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் ஆணையரகம், திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டடம் மற்றும் வால்பாறையில் கட்டப்பட்டுள்ள சிங்காரவேலர் ஓய்வு இல்லம் ஆகியவற்றையும்திறந்துவைத்தார். தேர்வு செய்யப்பட்ட 89 பேருக்கு பணி நியமன ஆணை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்பட தொகுதி 1 இல் அடங்கிய பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 89 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
