சென்னை:எடப்பாடி என்ன எம்ஜிஆரா, ஜெயலலிதாவா? திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் விமர்சனம்!!!

sen reporter
0

எடப்பாடி பழனிசாமி தன்னை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று நினைத்துக் கொள்கிறார் எனவும், உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது என்றும் அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அண்ணா அறிவாலயத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும், அதிமுக முன்னாள் எம்பியுமான வி.மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்.சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த வி.மைத்ரேயன் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக பதவி வகித்தவர். 1990ஆம் ஆண்டு பாஜகவில் இருந்த மைத்ரேயன், பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த மைத்ரேயன், பின்னர்மீண்டும்பாஜகவில்சேர்ந்தார்.இதனையடுத்து கடந்த 2024ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். தற்போது மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்த மைத்ரேயன், திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டபலர்உடனிருந்தனர்இதனைத்தொடர்ந்து முன்னாள் எம்.பி மைத்ரேயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மண், மொழி, மானம் காக்க "ஓரணியில் தமிழ்நாடு" என்ற முதலமைச்சர் ஆணைக்கு இணங்க, இன்று திமுகவில் என்னை இணைத்துக் கொண்டேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு பொருளாதாரம் உட்பட அனைத்திலும் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.அதிமுகவின் போக்கு சரியாக இல்லை, எடப்பாடி பழனிசாமி வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை அறிவித்துள்ளார். ஆனால் அந்த கூட்டணியை அறிவித்ததே அமித்ஷா தான். ஒரு சிலர் திட்டமிட்டு அதிமுகவை அவர்கள் கைகளில் வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். அதிமுகவில் என்னை பயன்படுத்திக் கொள்ளவில்லை. மேலும் அதிமுக, பாஜக கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லை.தொடர்ந்து கட்சி மாறுகிறேன் என்று என்னை பார்த்து சொல்வது தவறான ஒன்று. ஒரு இயக்கத்தில் பயணிக்கும் போது அந்த இயக்கத்துக்காகபணியாற்றியுள்ளேன். மாற்றம் ஒன்று தான் மாறாதது அடுத்த இலக்கைநோக்கிசெல்கிறேன்.எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆர் ஜெயலலிதா என நினைத்துக் கொள்கிறார். உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது” என்று கூறினார்.ஏற்கெனவே அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பி அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ள நிலையில், தற்போது மைத்தேரனும் திமுகவில் இணைந்திருப்பதுஅரசியல்வட்டாரத்தில்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top